களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தைச் சேர்ந்த ரெபேக்கா ஜோசப் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது யானை நலமாக உள்ளது, அதன் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என வனத்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, யானையை எங்கு விட வேண்டும் என்பதை நிபுணத்துவம் பெற்ற வனத்துறையே முடிவு செய்யும் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம் அரிக்கொம்பன் யானையை மதிகெட்டான் சோலையில் விடும் கோரிக்கையை நிராகரித்தது. அத்துடன் கேரளத்தைச் சேர்ந்த ரெபேக்கா ஜோசப் தொடர்ந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More