Mnadu News

அரிசி கொள்முதல்: மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

கர்நாடகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதையடுத்து தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி கர்நாடகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. ஆனால், கர்நாடக அரசு, கூடுதல் அரிசி கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் கேட்டது. ஆனால், மத்திய அரசோ, மாநில அரசு இதுகுறித்து முன்கூட்டியே தங்களிடம் ஆலோசிக்கவில்லை என்று கூறி கூடுதல் அரிசி வழங்க மறுத்துவிட்டது. இதனைக் கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பேசியுள்ள மாநில துணை முதல் அமைச்சரும்; கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் கர்நாடக மக்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்குவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பிற மாநிலங்களில் இருந்து அரிசி வாங்கி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்’ என்று தெரிவிததுள்ளார்.

Share this post with your friends