2019ஆம் ஆண்டில், பிரதமர் மோடி ஹோலோங்கியில் பசுமை விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார். சுமார் 640 கோடி ரூபாய் செலவில் 690 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பசுமை விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.இந்த விமான நிலையத்துக்கு டோனி போலோ என்று பெயரிடப்பட்டுள்ளது. டோனி என்றால் சூரியன் என்றும் போலோ என்றால் சந்திரன் என்றும் குறிப்பிடப்படுகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில 8 ஆயிரத்து 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கமெங் நீர்மின் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More