Mnadu News

அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்.

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை, அங்கீகரிக்கும் வகையில், அமெரிக்கா செனட் சபையில் ஜனநாயக கட்சி எம்.பி., ஜெப் மெர்க்லி மற்றும் குடியரசு கட்சி எம்.பி., பில் ஹகெர்டி ஆகியோர் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். லடாக்கில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு ஆதரவாக தீர்மானத்தை அவர்கள் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின்படி, இந்தியா சீனா இடையிலான மெக்மகோன் சர்வதேச எல்லைக்கோட்டிற்கு இந்தியா அங்கீகாரம் வழங்குகிறது. அருணாச்சல்லிற்கு சீனா உரிமை கொண்டாடுவதை எதிர்க்கவும், எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபடுவதுடன், எல்லைப்பகுதியை ராணுவ பலத்தை கொண்டு தன்னிச்சையாக மாற்றுவதற்கும், கிராமங்களில் கட்டுமானங்களை கொண்டு வருவதற்கும் தீர்மானத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்ததுடன், தொலைத்தொடர்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்திய இந்தியாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளில் இந்தியா – அமெரிக்கா நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. குவாட், கிழக்காசிய உச்சி மாநாடு மற்றும் ஆசியான் அமைப்பு உள்ளிட்டவற்றில் இந்தியாவுடனான பல தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த தீர்மானத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share this post with your friends

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.

ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...

Read More

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு.

கர்நாடகாவில் தாவணகெரேவில் பேசிய பிரதமர்,சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக...

Read More