“பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகி மாபெரும் வசூலை ஈட்டி ஒட்டுமொத்த உலகையே பிரமிக்க வைத்தது. சுமார் ₹600 கோடிகள் வரை லைக்கா நிறுவனம் லாபம் கண்டது.
இந்த படத்தின் திரைக்கதை, வசனங்கள், நடிகர்களின் நடிப்பு எவ்வளவு பேசப்பட்டதோ, அதற்கு ஈடாக படத்தைப் தூக்கி நிறுத்தியது இசை புயலின் பின்னணி இசை மற்றும் பாடல்கள். முதல் முறையாக கவிஞர் வைரமுத்து இல்லாது ஏ ஆர் ரஹ்மான் வேறு புதிய பாடல் ஆசிரியர்கள் உடன் பயணம் செய்தார்.
இப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிலையில் இன்று “அலைகடல்” வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. சிவா ஆனந்த் வரிகளில், அந்தரா நண்டி குரலில் மனதை மயக்கும் கடல் பின்னணியில் இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
சாங் லிங்க் : https://youtu.be/D0lp6b1dsK4