டெல்லி மாநில அரசு அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சட்டம் – ஒழுங்கு, போலீஸ் நிலம் தவிர மற்ற அனைத்து நிர்வாகமும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உள்ளது என தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து, அரசு அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன்படி பணியிட மாற்றம் தொடர்பான பிரச்னைகளில் துணை நிலை ஆளுநரின் முடிவே இறுதியானது எனக்கூறப்பட்டு உள்ளது.இந்நிலையில், மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‛‛அவசர சட்டம் அரசியல்சாசனத்திற்கு எதிரானது. இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More