Mnadu News

அவதார் 2’ ரிலீசுக்கு கேரளாவில் திரையரங்க உரிமையாளர்கள் தடை.

ஜேம்ஸ் கேமருன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘அவதார்’, உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகம், ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர் ’ என்ற பெயரில் உருவாகி உள்ளது. ஹாலிவுட் படமான இது , தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உட்பட 160 மொழிகளில் வெளியாகிறது.
டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இதன் டிரெய்லர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுவாக பிற மொழிப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில் லாபத்தில், 50 முதல் 55 % வரை விநியோகஸ்தர்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் பங்கு கொடுப்பது வழக்கம்.
இந்தப் படத்துக்கு, 60% வேண்டும் என விநியோகஸ்தர்கள் கேட்டுள்ளனர். இதற்கு உடன்படாத திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட தடை விதித்துள்ளனர். இந்தப் படம் அங்கு சுமார் 400 திரையரங்கங்களில் வெளியாக இருந்தது.

Share this post with your friends