Mnadu News

அவ்வை நடராசனுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி: ஸ்டாலின் அறிவிப்பு.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான மூத்த தமிழறிஞர் 86 வயதான அவ்வை நடராசன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை காலமானார்.
87 வயதான மூத்த தமிழறிஞர் அவ்வை நடராசன்; உடலுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
மறைந்த பெருந்தகை அவ்வை நடராசனின்; தமிழ்ப் பணிகளை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மறைந்த அவ்வை நடராசனின் இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

Share this post with your friends