Mnadu News

“அஸ்வின்ஸ்” படத்தின் வசூல் இவ்வளவா?

வசந்த ரவி : 

“தரமணி” என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் வசந்த் ரவி. முதல் படமே இவருக்கு சிறந்த அறிமுகம் நடிகர் போன்ற பல விருதுகள் மற்றும் பாராட்டுக்களை பெற்று தந்தது. அதன் பின்னர் வந்த படங்களும் இவரின் படத் தேர்வு முறைகளும் ரசிகர்களை வியப்படைய வைத்தன. ஆம், தற்போது அஸ்வின்ஸ் வெளியாகி உள்ளது, இதன் பின்னர் ஜெயிலர், வெப்பன் போன்ற படங்கள் லைன் அப்பில் உள்ளன. 

அஸ்வின்ஸ்: 

தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி லீட் ரோலில் நடித்துள்ள ஹாரர் ஜானர் படமான “அஸ்வின்ஸ்” கடந்த ஜூன் 23 ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், “அஸ்வின்ஸ்” படத்தில் மிக முக்கிய ரோல்களில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதயாதீப் போன்ற பலர் நடித்துள்ளனர். விஜய் சித்தார்த் இப்படத்துக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளார்.

கதையின் நாட்: 

கதைப்படி ஒரு ஆவணப் படம் எடுப்பதற்காக ஒரு பேய் வீட்டுக்குள் நுழையும் ஒரு ஐந்து பேர் கொண்ட ஐந்து பேர் ஒரு சாப வலைக்குள் சிக்குகின்றனர். அவர்கள் அதில் இருந்து எப்படி மீண்டு வந்தனர் என்பதே படத்தின் மீதிக் கதை. 

 வசூல் நிலவரம்: 

ஜூன் 23 அன்று வெளியான இந்த படம் கடந்த 3 நாட்களில் ₹1.40 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்துக்கு நல்ல வரவேற்பு நாளுக்கு நாள் கூடி வருவதால் இந்த வசூல் இன்னும் உயரும் என திரை அரங்கு உரிமையாளர்கள் கணித்துள்ளனர். 

Share this post with your friends