கடந்தாண்டு, ஜூலை.,11ஆம் தேதி, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னை அடுத்த வானகரத்தில் நடந்தது.அப்போது, பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.அப்போது, பன்னீர்செல்வம் – பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதில், அலுவலகத்தில் இருந்த கோப்புகள் மற்றும் ஆவணங்களை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திருடி சென்றதாக, போலீசில் புகார் கூறப்பட்டது.இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இச்சூழலில்,அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை மீண்டும் ஒப்படைக்கோரி, மேல்முறையீட்டு மனுவை அ.தி.மு.க., அமைப்புச் செயலர், சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை, மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More