Mnadu News

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு தலைமை கழகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பு வருவதை பொறுத்து அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று ஆலோசிக்கிறார்கள். மேலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்க உள்ளார்கள். இந்த கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவுகள் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகிறது.

Share this post with your friends