ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 வரை நடைபெற உள்ளது.இந்தியா , பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த ஆசியக் கோப்பையில் பங்கேற்கின்றன. இந்த 6 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று முடிவில் 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.ஆசியக் கோப்பையில் மொத்தமுள்ள 13 போட்டிகளில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடக்கவிருந்த நிலையில் இந்தியா மறுப்பு தெரிவித்ததால் இலங்கையிலும் போட்டி நடத்தப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More