டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார். 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் பிரக்ஞானந்தா. இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார். அதே போல், மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளார். முன்னதாக சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்து. தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் தங்கப்பதக்கம், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் மற்றும் வைஷாலி வெண்கலப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More