ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்கான கணினி வழித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 3.2.2023 முதல் 12.2.2023 வரை இரண்டு வேளைகளிலும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கடந்த 3 ஆம் தேதி தேர்வு வாரிய இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிப்ரவரி 3 முதல் 14 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள இரண்டாம் தாளுக்கான கணினி வழித் தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சனிக்கிழமை(ஜன.28) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக் கூட நுழைவுச் சீட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது பயன்பாட்டு முகவரி மற்றும் கடவுச்சொல் உள்ளீடு செய்து தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்,பொதுக்குழு தீர்மான வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்களும் நிறைவு.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...
Read More