தமிழ்நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அனுமன் ஜெயந்தியையொட்டி சென்னை நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். மக்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெறவும், நமது மாநிலம் மற்றும் தேசம் அமைதியும் வளமும் பெறவும் பிரார்த்தனை செய்ததாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டுளளது.