குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில்; சிலரின் மொழி மற்றும் நடவடிக்கைகள் நாட்டு மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. யார் என்ன முழக்கமிட்டாலும் அவதூறு பரப்பினாலும் எங்களது மக்கள் நலப்பணி தொடரும். ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு வருகிறோம். தீர்வு காண்பதில் நாங்கள் ஒரு போதும், காங்கிரசை போல் ஓடி ஒளிந்தது இல்லை. சாதனை படைக்கும் திறன் உள்ள 10 மாவட்டங்களை கண்டறிந்தோம். அங்கு தொடர்ச்சியாக கவனம் மற்றும் ஆய்வு செய்ததால், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மேம்பட்டுள்ளது. இதனால் , 3 கோடி பழங்குடியினர் பயன்பெற்றுள்ளனர்.
,தேசம் எங்களுடன் உள்ளது. காங்கிரசை நிராகரித்த மக்கள், அக்கட்சிக்கு நேரம் வரும் போதெல்லாம் தண்டனை வழங்குகின்றனர். பழங்குடியினருக்காக நல்ல நோக்கத்துடன் காங்கிரஸ் பணியாற்றி உள்ளதா. காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் கொள்கைகள் அனைத்தும் ஓட்டு வங்கி அரசியலை சார்ந்து உள்ளது.கடந்த காலங்களில் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் குரல்கள் கேட்கப்பட்டது கிடையாது. ஆனால், தற்போது அவர்களின் நலனுக்காக உழைத்து வருகிறோம்.முடிவு எடுப்பதில் பெண்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு உழைத்து வருகிறது.
உலகத்தில் உள்ள பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை நமது சந்தையில் விற்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. இதற்காக நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதப்பட்டன. டிவியில் பேட்டி அளிக்கப்பட்டது. நேற்று வரை நமது விஞ்ஞானிகளை இழிவுபடுத்த முயற்சி நடந்தது. ஆனால், நமது நாட்டு விஞ்ஞானிகள் தயாரித்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்து 150 நாடுகள் பலன் பெற்றுள்ளன. அரசின் கொள்கைகள் காரணமாக, சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில், டுரோன்கள் பயன்படுத்தப்பட்டன. சில்லறை முதல் சுற்றுலா வரை அனைத்து துறைகளும் வளர்ந்து வருகிறது.பாதுகாப்பு துறையில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியாவை தன்னிறைவு பெற செய்ய இந்த துறையில் ஏராளமான நிறுவனங்கள் நுழைகின்றன.
அரசின் திட்டங்களில் உள்ள பெயர்கள் மற்றும் அதில் உள்ள சமஸ்கிருத வார்த்தையும் சிலருக்கு பிரச்னை உள்ளது. நேரு குடும்பத்தினரின் பெயரில் 600க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. நேரு சிறந்த மனிதர் எனில் அவரது குடும்பத்தினர் நேருவின் பெயரை ஏன் குடும்ப பெயராக வைக்கவில்லை. நேருவை குடும்ப பெயராக வைத்து கொள்வதால் என்ன அவமானம் ஏற்படுகிறது.
356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைத்தது எந்த கட்சி? மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் 90 முறை கலைக்கப்பட்டது. இதனை செய்தது யார். 356வது சட்டப்பிரிவை 50 முறை ஒரு பிரதமர் பயன்படுத்தினார். அவரது பெயர் இந்திரா. கேரளாவில் தேர்வு செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சி, நேருவுக்கு பிடிக்காததால், ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தமிழகத்தில், எம்ஜிஆர், கருணாநிதி போன்ற தலைவர்களின் ஆட்சி காங்கிரசால் கவிழ்க்கப்பட்டது. சரத்பவார் அரசும் கலைக்கப்பட்டது. என்டிஆர், சிகிச்சைக்கு அமெரிக்கா சென்ற போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போதும், அவரது ஆட்சியை அகற்ற முயற்சி நடந்தது. இரண்டு முறை ஆட்சியை கவிழ்த்த காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்தது ஏன்? ஆளுநர்கள்; மாளிகைகள், காங்கிரஸ் அலுவலகம் போல் செயல்பட்டது ஏன் என தி.மு.க., எம்.பி.,க்களிடம் மாநிலங்களிவையில் பிரதமர் மோடி கேள்வி எழுப்பி பேசினார்.
கடந்த 60 ஆண்டுகளில், நாட்டிற்கு வலிமையான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்ததாக மல்லிகார்ஜூன கார்கே கூறினார். ஆனால், 2014ல் நான் பார்த்த போது, பாதைகளில் பள்ளங்களை மட்டுமே காங்கிரஸ் ஏற்படுத்தியிருந்தது. பஞ்சாயத்துகள் முதல் நாடாளுமன்றம்; வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், நிரந்தரமான பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்தது கிடையாது.பாவச்செயல்களை செய்த காங்கிரஸ் கட்சி தற்போது நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சி செய்கிறது. நிரந்தரமான பிரச்னைகளுக்கு தீர்வு காண காங்கிரஸ் முயற்சி செய்தது கிடையாது.
தொழில்நுட்ப உதவியுடன், பணிசெய்யும் கலாசாரத்தை மாற்றினோம். 11 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. சாமானிய மக்களும் அதிகாரம் பெறும் வகையில் ஜன்தன் வங்கிக்கணக்குகள் துவங்கப்பட்டன. கடந்த 9 ஆண்டுகளில் 48 கோடி ஜன்தன் வங்கிக்கணக்கு துவங்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, மக்கள் தொடர்ச்சியாக உங்கள் கணக்கை முடிக்கின்றனர். இதனால், கோபத்தை இங்கு வந்து காட்டுகிறீர்கள். ஒரு தனி நபர், வலிமையுடன் பல விஷயங்களை எதிர்கொள்வதை மக்கள் பார்க்கின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு தேவையான கோஷங்கள் கிடைக்கவில்லை. இதனால், அவர்கள் தங்களது கோஷங்களை மாற்ற வேண்டி உள்ளது. நான் இந்த நாட்டிற்காக வாழ்கிறேன். என்று பிரதமர் மோடி பேசினார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More