தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அளித்த முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், 2019 ஆம் ஆண்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரசுடன் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அப்போது, தேசியவாத காங்கிரசை சேர்ந்த பலர் பா.ஜ.க,வை அணுகி, எங்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க விரும்பினர்.இது தொடர்பாக சரத்பவாருடன் சந்திப்பு நடந்தது. அப்போது, அரசு அமைக்கவும், அதற்கான நடைமுறைகளை துவக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆட்சி அமைப்பதற்கான அதிகாரம் எனக்கும், அஜித் பவாருக்கும் வழங்கப்பட்டது. அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டோம்.ஆனால், பதவியேற்பதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்னால் சரத்பவார் தனது முடிவை திரும்ப பெற்றுக்கொண்டார். இதனால், வேறு வழியின்றி அஜித் பவார் என்னுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆட்சி அமைக்கும் போது, சரத்பவாரும் தங்களுடன் வருவார் என்ற நம்பிக்கையில் அஜித்பவார் இருந்தார்.,சரத்பவாருடன் ஆலோசனை நடத்திய பிறகே ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டோம். கூட்டணியை முறித்து உத்தவ் தாக்கரே எங்கள் முதுகில் குத்தினார். சரத்பவார், ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டார். என்று கூறி உள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More