Mnadu News

ஆட்டோவில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க இயலாது: நீதிமன்றம் உறுதி.

நாகர்கோவிலைச் சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நலன் மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் பள்ளி வாகன விதிமுறைகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு பல விதிகள் இருக்கும் போது ஆட்டோ ரிக்சாக்களுக்கு என்ன விதி இருக்கிறது.
பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றப்பட வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
அதோடு, வாகன விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.

Share this post with your friends