Mnadu News

ஆட்டோ கட்டணம்: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபருக்கு பின் ஆட்டோ கட்டணம் மறுநிர்ணயம் செய்யப்படவில்லை என வழக்குரைஞர் ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். எரிபொருள் விலை ஏற்றத்தால் ஆட்டோ கட்டணத்தையும் ஓட்டுநர்கள் தாங்களாகவே உயர்த்தி வசூலிப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு பதில் தர வேண்டும் உத்தரவிட்டுள்ளது. அதோடு, இவ்வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Share this post with your friends