Mnadu News

ஆதிபுருஷ் படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரம் தெரியுமா ? வெளியான எக்ஸ்க்ளூசிவ் தகவல்!

கதை :

நடிகர் பிரபாஸ்:

பான் இந்தியா படங்கள் இவர் இல்லாமல் இல்லை என சொல்லும் அளவுக்கு வளர்ந்து உள்ளார் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் பெரிதும் கவனம் ஈர்த்து தொடர்ந்து பல பான் இந்தியா படங்களில் நடித்து கொடிகட்டி வருகிறார்.

தொடர் தோல்விகள் :

ஆனால், அவர் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. ஆனாலும், இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே ஆகிய பிரம்மாண்ட பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் “ஆதிபுருஷ்” படம் ராமாயணக் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ், சீதை ஆக கிரித்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் ஆகியோர் நடிக்கிறார்கள். ஓம் ராவத் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

டிரெய்லர் வெளியீடு :
“ஆதிபுருஷ்” படத்தின் டிரைலரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. கலவையான விமர்சனங்கள் இந்த படத்தின் ட்ரெய்லர்ருக்கு கிடைத்துள்ளது. அதோடு, படம் வெளியாகும் போது திரை அரங்குகளில் அனுமானுக்கு ஒரு இருக்கை விடப்படும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் படத்தின் டிரெய்லரை கலாய்த்து வருகின்றனர்.

ஜூன் 16 வெளியீடு:

உலகமெங்கும் ஜூன் 16 அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் “ஆதிபுருஷ்” வெளியாக உள்ளது. அதோடு, இப்படம் 3டி டெக்னாலஜியில் உருவாகியுள்ளது.

வெளியான சம்பளம் விவரம் :

₹500 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது “ஆதிபுருஷ்”. ராமராக நடித்துள்ள பிராபாசுக்கு ₹ 150 கோடி சம்பளம் என்றும், ராவணனாக நடித்துள்ள சைஃப் அலிகான் அவர்களுக்கு ₹12 கோடி சம்பளம் என்றும், சீதையாக நடித்துள்ள கீர்த்தி சனோன் அவர்களுக்கு ₹3 கோடி சம்பளம் என்றும்,
லட்சுமணனாக நடித்துள்ள சன்னி சிங்குக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கி உள்ளது படக்குழு. படம் வெளியானால் தான் “ஆதிபுருஷ்” எந்த அளவுக்கு பாக்ஸ் ஆபீஸில் ஜொலிக்க போகிறது என்பது தெரிய வரும்.

Share this post with your friends