Mnadu News

ஆந்திரத்தின் புதிய தலைநகரமாகிறது விசாகப்பட்டினம்:முதல்அமைச்சர் ஜெகன்அறிவிப்பு.

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அமையும் என முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி புது டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரகக் கூட்டமைப்பு கூட்டத்தில் தெரிவித்தார்.இனி வரும் நாள்களில் நமது தலைநகராக மாறும் விசாகப்பட்டினத்திற்கு உங்களை அழைக்கிறேன் எனவும், மார்ச் 3 மற்றும் 4 தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை அங்கு நடத்தப்போவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.மேலும், வரும் மாதங்களில் விசாகப்பட்டினம் புதிய தலைநகராக மாறப்போவதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.
கடந்த 2014 ஜூன் மாதம் ஆந்திரம், தெலங்கானா மாநிலப் பிரிவினைக்குப் பின்னர், ஆந்திர முதல்வர் ஆன சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவித்து ஆட்சி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், ஆந்திரத்தின் தலைநகரம் விசாகப்பட்டினம் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More