ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் இன்னும் 12 நாட்களில் சுவாமிக்கு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதில் லட்சுமி நரசிம்ம சுவாமி பல்வேறு வாகங்களில் எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளார். இதில் ஒரு நாள் உற்சவ மூர்த்திகள் தேரில் வலம் வருவதற்காக ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்து வந்தனர். அவ்வாறு தேரில் சுத்தம் செய்து ஊர்வலத்திற்கு தயார்படுத்தி கொண்டு இருந்தபோது திடீரென தேர் சரிந்து உடைந்து விழுந்தது. பல ஆண்டுகள் பழமையான தேர் என்பதால் முற்றிலும் பழையதாகிவிட்டதால் இவ்வாறு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More