ஆந்திராவின் குண்டூர் பகுதியை சோ்ந்த 5 பேர் ஒரு காரில் சபரிமலைக்கு சென்றுள்ளனர். கேரள மாநிலம் இ்டுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் வழியாக நேற்று அதிகாலை 4 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. இதை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கினர். கொஞ்ச நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கி உள்ளது.
தீ மளமளவென பரவியதால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் காரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
கார் தீப்பிடிக்க துவங்கியதும் அனைவரும் காரில் இருந்து இறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வண்டிப்பெரியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.