Mnadu News

ஆந்திராவில் மின்சாரம் பாய்ந்து 4 யானைகள் பலி:போலீசார் விசாரணை.

ஒடிசாவில் இருந்த வந்த 6 யானைகள் ஆந்திரம் மாநிலம் ஸ்ரீPகாகுளம் மாவட்டம் பாமினி மண்டலத்தில் சுற்றித்திரிந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில், கத்ரகெடா கிராமத்தில் உணவைத் தேடி விளைநிலங்களை நோக்கி வந்த யானைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 யானைகள் உயிரிழந்தன.2 யானைகள் நூலிழையில் உயிர்தப்பின. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த யானைகளை மீட்டனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More