சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களின் அரிசி தேவை, ஆந்திர மாநில நெல் வரத்து வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது.ஆந்திரா மாநிலத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு நெல் மூட்டைகள் எடுத்து வரப்படும். இரண்டு மாதங்களாக ஆந்திராவில் இருந்து நெல் வரத்து குறைந்தது. இதனால், அரிசி விலை அதிகரித்தது. இந்த சூழ்நிலையில், ஆந்திராவில் இருந்து நெல்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. தினமும், 50க்கும் மேற்பட்ட லாரிகளில் வரத்து உள்ளது. இது அதிகரித்தால், அரிசி விலை மூட்டைக்கு, 50 முதல், 100 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More