Mnadu News

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள்: மாநில அரசுளுக்கு மத்திய அரசு அறிவுரை.

மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா எழுதியுள்ள கடிதத்தில், சூதாட்டம் சட்டவிரோதமானது என்பதால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஊடகங்கள் அது தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடங்களில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சில சூதாட்டம் மற்றும் பந்தய தளங்கள் விளம்பரம் செய்ய துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். வெளிப்புறங்களில் ஆன்லைன் சூதாட்டங்கள் மற்றும் பந்தயம் தொடர்பான விளம்பரங்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More