தங்கம் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும், அதன் மீதான மோகம் மட்டும் பெண்களுக்கு சற்றும் குறையவில்லை. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக உயர ஒரு சவரன் தங்கம் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 88 உயர்ந்து ரூ.40,448 க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.5,056-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்தது ரூ.73-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73,000 க்கு விற்பனையாகி வருகிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More