தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்தது. பின்னர், ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தங்கம் விலை 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்படி, இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் 200 ரூபாய் குறைந்து, 40 ஆயிரத்து 120- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 5ஆயிரத்து 15ரூபாய் ஆக விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்து 74,ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் உயர்ந்து 74 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More