அமெரிக்க தலையீட்டால் ஆப்கானிஸ்தானில் 2001-ஆம் ஆண்டு தலிபான்களின் ஆட்சி நீக்கப்பட்டது. அப்போது, அங்கு அதிகாரமிக்க பதவியில் கபீர் இருந்தார். கபீர் மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதாரத் தடைகள் விதித்தது. இதனால் கபீர் பாகிஸ்தானுக்கு தஞ்சம் புகுந்தார். இதன் தொடர்ச்சியாக, தலிபான்கள் கடந்த 2021 ஆகஸ்ட்டில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முல்லா முகமது ஹசன்தான் ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கபீருக்கு பிரதமர் பதவியை தலிபான்கள் வழங்கி உள்ளனர்.முல்லா முகமது ஹசன் உடல்நலக் குறைவால் சிகிச்சையில் இருப்பதனால் கபீர் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் தலிபான்களுக்குள் அதிகாரப் போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை தலிபான்கள் மறுத்துள்ளனர். இது வழக்கமான மாற்றம்தான் என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

அசாமில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்.
அசாமில் மிதமான நிலநடுக்கமானது உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி ஏழு...
Read More