Mnadu News

ஆப்கன் பள்ளியில் குண்டுவெடிப்பு: 10 மாணவர்கள் பலி.

வடக்கு ஆப்கானிஸ்தானில் வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் மதப்பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் 10 மாணவர்கள் கொல்லப்படடுள்ளனர். மேலும் பலர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அப்துல் நஃபி தாகோர் தெரிவித்தார். மதப் பள்ளியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this post with your friends