ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூன்று குழந்தைகள் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 300 வீடுகள் வரை அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.இதற்கிடையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் வடக்கு பால்க், சமங்கன், தகார், குண்டூஸ் மற்றும் பாக்லான் மாகாணங்களில் உள்ள தோட்டங்கள் மற்றும் பழ மரங்கள் சேதமடைந்தன.வரும் நாள்களில் நாட்டின் 34 மாகாணங்களில் 18 மாகாணங்களில் அதிக மழை மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடும் என ஆப்கானிஸ்தானின் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ட்விட்டரின் புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ பொறுப்பேற்பு.
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை...
Read More