டிஜிட்டல் பே:
இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் முறை அறிமுகமான நாள் முதலே பலரும் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாறி வருகின்றனர். டிஜிட்டல் பே முறைக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு நாளும் யுபிஐ பரிவர்த்தனையின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. கடந்த மே மாதம் மட்டுமே சுமார் 9 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் பே:
இந்திய பயனர்களுக்கு ஆப்பிள் பே வசதியை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் ஆப்பிள் நிறுவனம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது. இந்திய பயனர்களுக்காகவே பிரத்யேகமாக இந்தியாவில் பயன்படுத்தும் வகையில் இதன் இயக்கம் இருக்கும் என தெரிகிறது. கடந்த ஏப்ரலில் ஆப்பிள் நிறுவனம் சார்பில் மும்பை மற்றும் டெல்லியில் “ஆப்பிள் ஸ்டோர்” நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விரைவில் அறிமுகம் :
ஆப்பிள் பே மூலம் ஆப்பிள் சாதன பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது. மற்ற யுபிஐ செயலிகள் எப்படி செயல்படுகிறதோ அது போலவே இதன் இயக்கம் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.