Mnadu News

ஆம்ஸ்டர்டாமில் இந்திய உணவகத்தை நிறுவிய கிரிக்கெட் வீரர் ரெய்னா: விரைவில் தொடக்க விழா.

ரெய்னா இந்திய உணவகம்’ குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள ரெய்னா இந்திய உணவகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உணவு மற்றும் சமையலில் எனது ஆர்வம் என்ன என்பது குறித்து முக்கிய இடத்தை இது பெறுகிறது. உணவின் மீது எனக்குள்ள பிரியத்தை நீங்கள் அறிவீர்கள். இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் உணவு முறையை ஐரோப்பாவின் இதய பகுதிக்கு கொண்டு வந்துள்ளேன். நிச்சயம் இங்கு ருசியான உணவு கிடைக்கும்.வெகு விரைவில் இதன் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த சாகசப் பயணத்தில் என்னுடன் இணைந்திருங்கள்” என ரெய்னா தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More