தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பரப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி, 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாகவும், 6 இடங்களில் ஊர்வலமாகவும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்தி கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் பொதுவெளியில் நடத்த அனுமதி அளிக்குமாறும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும்.கடுமையான ஒழுங்குகளுடன் பேரணியை அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம். தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More