Mnadu News

ஆர்.எஸ்.எஸ். பேரணி வழக்கு மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆ.எஸ்.எஸ் பேரணியை அனுமதிப்பது மிகவும் சென்சிட்டிவான விஷயம் என்றும் பிர்ச்சினைகள் உள்ள இடங்களில் மட்டுமே பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும், முழுமையாக தடை விதிக்கவில்லை என்றும் பேரணி விவகாரத்தில் முடிவெடுக்கக் கூடிய முழு அதிகாரமும் அரசுக்குதான் உள்ளது என வாதிட்டார். அதையடுத்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தமிழகத்தில் 50 மாவட்டங்களில் எங்களது பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாக வாதிட்டார். இதை கேட்ட தமிழக வழக்குரைஞர் அதிர்ச்சி அடைந்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கை மார்ச் 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More