நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆறுமுகம் பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தங்கம்மன் கோவிலில் புரட்டாசி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 5 ஆம் தேதி கால்நாட்டு விழா முதல் ஓவ்வொரு நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவில் கொடை கொடை விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும் முளைப்பாரி ,மாவிளக்கு எடுத்து வந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். மேலும் திருவிழாவின் விழாவில் முக்கிய விழாவான மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. தங்கமன் கோவில் கொடை விழாவில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.