தமிழக ஆளுநர் ரவி மற்றும் ஆளுங்கட்சி அதன் கூட்டணி கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அவரை மாற்ற வேண்டும் என குடியரசுத்தலைவரிடம்; அக்கட்சி எம்.பி.,க்கள் மனு அளித்துள்ளனர். ஆளுநர் தெரிவித்த சில கருத்துகளுக்கு அக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ரவியை சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை ஆளுநர் ரவியை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது துணை ராணுவப்படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதோடு, கோவை கார் குண்டுவெடிப்பு குறித்தும், தமிழக சட்டம் ஒழுங்கு குறித்தும் அண்ணாமலை, இந்த சந்திப்பின் போது, ஆளுநரிடம் புகார் தெரிவித்ததாக தெரிகிறது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More