பால்விலை உயர்வு குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பசும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டு 35 ருபாய் ஆகவும், எருமைப் பால் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டு 44 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடு செய்யும் வகையில் விற்பனை விலை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நிறைகொழுப்புள்ள ஆரஞ்சு நிற பால் பாக்கெட் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்ந்துள்ளதால் இனி ஒரு லிட்டர் 60 ரூபாயாக இருக்கும்.
அட்டைத்தாரர்களுக்கு விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் ஆரஞ்ச் பால் பாக்கெட் 46- ரூபாய்க்கே விற்பனை செய்யப்படும்.
இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இருப்பினும், நுகர்வோரின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட நீல நிற பாக்கெட் பால் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டின் விலையில் மாற்றமின்றி தற்போதைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும், சில்லறை விற்பனையாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் தொடர்ந்து ஆவின் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More