ஆவின் பொருள்களின் விலைகளை அவ்வப்போது அந்நிறுவனம் உயர்த்தி வருகிறது. சமீபத்தில் ஐஸ்கிரீம், தயிர், நெய், ஆரஞ்சு நிற பால் பாக்கெட் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்த்தி அறிவித்தது. ஆவின் பொருள்களின் விலை ஏற்றத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்ததுடன், விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என அறிவித்தார். இந்நிலையில், ஆவின் நெய்யின் விலையை மீண்டும் உயர்த்தி அறிவித்துள்ளது ஆவின் நிறுவனம். ஆவினில் ஒரு லிட்டர் நெய் ரூ.580 இல் இருந்து ரூ. 630 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பிரீமியம் நெய் ரூ.630 இல் இருந்து ரூ.680 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 லிட்டர் நெய் பாட்டில் விலை ரூ. 2,900 இல் இருந்து ரூ.3,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்தது.பால் விலையைத் தொடர்ந்து நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More