மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், மார்ச் 8 ஆம் தேதி ஆமதாபாத் வரும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஹோலி பண்டிகையில் கலந்துகொள்கிறார். பின்னர் மார்ச் 9ல் நடைபெறவுள்ள இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தை இரு தலைவர்களும் பார்வையிடுகின்றனர். அதன்பின்னர் டெல்லி செல்லும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். வர்த்தகம், முதலீடு, முக்கிய கனிமங்கள் உள்ளிட்டவை குறித்து இரு நாடுகளின் பிரதமர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்தித்துப் பேசுகிறார் ஆல்பனேசி. இந்த பயணம் குறித்து ஆல்பனேசி, ‘பிரதமராக இது எனது முதல் இந்தியப் பயணம். ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வலுவான பிணைப்பை வலுப்படுத்த எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இந்தியாவுடனான எங்கள் உறவு வலுவானது, ஆனால் அது மேலும் வலுப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய பிரதமராக ஆல்பனேசி கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றதையடுத்து, முதல் முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அவரது இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More