ரஷ்யா-உக்ரைன் இடையே ஒராண்டு காலத்திற்கு மேலாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன.இந்நிலையில் கருங்கடல் பகுதியில் பறந்த இங்கிலாந்தின் இரண்டு போர் விமானங்களை ரஷ்ய விமானங்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்ய எல்லைக்குள் இங்கிலாந்து விமானங்கள் வந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இங்கிலாந்து தரப்பில் கூறும் போது, இது சர்வதேச வான்பரப்பில் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு என தெரிவித்துள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More