பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நான் ஈ, அஞ்சான், கத்தி, தெறி, மெர்சல், யூ டர்ன், 24 போன்ற பல படங்களில் நடித்து இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாகி உள்ளார் சமந்தா.

சென்ற வருடம் புஷ்பா 1 படத்தில் ஊன் சொல்றியா பாடலுக்கு இவர் ஆடிய கவர்ச்சி நடனம் படத்துக்கு பலம் சேர்த்தது.
பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ள சமந்தா தற்போது அவரே லீட் ரோலில் நடிக்கும் படியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அப்படி, இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் தான் ‘யசோதா’.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
டிரெய்லர் லிங்க்: https://youtu.be/7rsRx_VtlQU