ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த திமுக அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள். கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது.
எளியோர் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்ப்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த திமுக அரசு. இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ரூ.20 உயர்த்தியுள்ளனர். எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா?” இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி...
Read More