இத்தாலியின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, எமிலியா மாகாணத்தில் பெய்த கனமழையினால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதோடு, வெள்ளத்தினால் தீவிர நிலச்சரிவு அதாவது, 120-க்கும் அதிகமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த வெள்ளத்தால் 37 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதே சமயம்;, ஏராளமான விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழையினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

ட்வீட்களை திருத்த 1 மணி நேரம் அவகாசம்: ட்விட்டர் எடிட் பட்டன் அம்சம் அறிமுகம்.
பயனர்கள் ட்வீட்களை திருத்தி எழுதலாம். இதற்கு முன்னர் பதிவு செய்த ட்வீட்களை திருத்த...
Read More