Mnadu News

இத்தாலி அருகே படகு விபத்து: 30 பேர் பலி, 50 பேர் உயிருடன் மீட்பு.

ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு படகு இத்தாலிய கடலோர நகரமான குரோடோனை நெருங்கிக்கொண்டிருந்தபோது பாறை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த 100க்கும் அதிகமானோரில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 50 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக ஆதன்குரோனோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 28 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலில் நிலவும் மோசமான வானிலையால் தேடுதல் பணி கடினமாக்கியுள்ளதாக இத்தாலிய தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends