Mnadu News

இந்தாண்டில் 18 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம்: சவுதி அரேபியா அரசு அறிவிப்பு.

சவுதி அரேபிய பொது ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, அரபு நாடுகளில் மொத்தம் 3 லட்சத்து 46 ஆயிரம் பேரும், ஆசிய நாடுகளில் இருந்து 1 லட்சத்துக்கும் அதிகமானோரும் இந்தாண்டு புனித பயணத்தில் பங்கேற்றனர். அதேசமயம் அரபு நாடுகளைத் தவிர்த்து ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் வந்திருந்தனர்.அத்துடன், 36 ஆயிரத்து 500 பேர் ஜரோப்பாவில் இருந்தும், ஆஸ்திரேலியா மற்றும் பட்டியலிடப்படாத பிற நாடுகளிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டனர். மொத்தம் 18 லட்சம் பேர்; இந்தாண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Share this post with your friends