Mnadu News

இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி; கழிவறையில் கட்டி போடப்பட்ட காவலாளி;

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கரும்பாக்கம் கிராமத்தில் இந்தியன் வங்கியின் கிளை அரும்புலியூரில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இரவு காவலராக கரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆப்பேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் காவலரை பலமாக தாக்கி வங்கி கழிவறையில், கட்டி போட்டு வைத்துவிட்டு வங்கியில், பின் பக்கம் இருந்த ஜன்னலை உடைக்க முற்பட்டுள்ளனர். ஜன்னல் கம்பிகள் வலுவாக இருந்ததால், உடைக்க முடியாமல் திரும்பி சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காவலாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends