2018 ஆம் ஆண்டு பூஜையுடன் துவங்கிய இந்தியன் 2 திரைப்படம் பல்வேறு சோதனைகளை கடந்து தற்போது மீண்டும் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை துவங்கியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன், குரு சோமசுந்தரம், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால் போன்றவர்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் பா.விஜய், தாமரை, விவேக் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. 220 கோடி இப்படத்தின் பட்ஜெட் ஆகும். பான் இந்தியா படமாக இது உருவாகி வருகிறது. இதில் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தந்தை நடிக்கிறார், அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒப்பனை கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே தர்பார் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் 2 அடுத்த வருடம் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.