Mnadu News

இந்தியாவின் மிக நீண்ட விரைவுச்சாலை:நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.

டெல்லி – மும்பை விரைவுச்சாலை ஆயிரத்து 386 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தியாவின் மிக நீண்ட விரைவுச்சாலை ஆகும். இந்த ஆயிரத்து 386 கிலோ மீட்டா விரைவுச்சாலை டெல்லியையும்; மும்பையையும் இணைக்கும். இது இந்தியாவின் தேசிய தலைநகர் டெல்லிக்கும், பொருளாதாரத்தின் தலைநகரான மும்பைக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துகிறது. கட்டுப்படுத்தப்பட்ட கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலை, பயண நேரத்தை 24 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாகக் குறைக்க சீரமைப்பு மேம்படுத்தலுடன் கட்டப்படுகிறது. எதிர்காலத்தில் இது 12 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும். 50 ஹவுரா பாலங்களுக்கு இணையான டெல்லி மும்பை விரைவுச் சாலையின் கட்டுமானத்திற்காக 12 லட்சம் டன் இரும்பு பயன்படுத்தப்பட உள்ளது.
246-கிலோ மீட்டர் தூரம் கொண்ட டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கான பயண நேரத்தை 5 மணி நேரத்தில் இருந்து சுமார் மூன்றரை மணிநேரமாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விரைவுச்சாலையின் முழு பணியும் நிறைவடைந்ததும், இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையாக இது மாறும். இது பயண நேரத்தைப் பொறுத்து பல நகரங்களை இணைக்கும். கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா, சூரத் ஆகிய முக்கிய நகரங்களுக்கு இணைப்பை வழங்க 40-க்கும் மேற்பட்ட பெரிய பரிமாற்ற சாலைகளாக இருக்கும்.
மேலும், ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள், பைப்லைன்கள் மற்றும் சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட பயன்பாட்டு பாதைகளை அமைப்பதற்காக 3 மீட்டர் அகலமான பிரத்யேக நடைபாதையும் இருக்கும்.
அதிவேக நெடுஞ்சாலையானது 500 மீட்டர், இடைவெளியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட நீர் ரீசார்ஜ் புள்ளிகள் அமைத்து மழை நீர் சேகரிப்பை எளிதாக்குகிறது. மேலும், தானியங்கி போக்குவரத்து மேலாண்மை அமைப்பையும் கொண்டுள்ளது.
டெல்லி, அரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் 15 ஆயிரம் ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த 94 வழித்தட வசதிகள் இருக்கும். இத்திட்டத்தின் மூலம் 10 கோடி மனித வேலைநாள் கொண்ட வேலைவாய்ப்பை உருவாக்கும்.
டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் அதிநவீன தானியங்கி போக்குவரத்து மேலாண்மை அமைப்பு இருக்கும். இந்தியாவிலும் ஆசியாவிலும் விலங்குகள் மேம்பாலங்கள், அண்டர்பாஸ்கள் ஆகியவற்றிற்கு இடமளிக்கும் முதல் அதிவேக நெடுஞ்சாலை இதுவாகும். ரணதம்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் இது சீரமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பபில், 12ஆயிரத்து 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் பகுதி முழுவதுமாக பொருளாதார வளர்ச்சியை கணிசமாக ஊக்குவிக்கும்.
புதிய இந்தியாவில்” வளர்ச்சி, மேம்பாடு மற்றும் இணைப்பின் இயந்திரமாக சிறந்த சாலை உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதே மோடியின் நோக்கம், நாடு முழுவதும் நடைபெற்று வரும் உலகத் தரம் வாய்ந்த விரைவுச் சாலைகள் பலவற்றின் மூலம் இது உணரப்படுகிறது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. டெல்லி – மும்பை விரைவுச்சாலையில் டெல்லி-தௌசா-லால்சோட் பகுதியை பாதை வரும் 14 ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு திறக்கப்படும்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More