Mnadu News

இந்தியாவின் வளர்ச்சிக்கு அதானி குழுமம் தடைக்கல்: ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலடி.

பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஜன.24-இல் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று 413 பக்க அறிக்கையை வெளியிட்ட அதானி குழுமம், இது குறிப்பிட்ட அதானி நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல. மாறாக, இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்.ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இவை பொய்யான தகவல்கள் மற்றும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கத்துடன் கூடிய பொய்யான குற்றச்சாட்டுகளின் தொகுப்பு என அதானி குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அதானி குழுமம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கைக்கு கருத்து தெரிவித்துள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம், தேசியம் எனும் போர்வையில் தன்னை சுற்றிக்கொண்டு மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க நினைக்கிறது அதானி குழுமம். இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் மற்றும் நல்ல எதிர்காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசாகும். அதே சமயம், இந்தியக் கொடியை போர்த்திக்கொண்டு நாட்டை முறையாக கொள்ளையடிக்கும் அதானி குழுமத்தால்தான் இந்தியாவின் வளர்ச்சி தடை படுகிறது என பதிலடி கொடுத்துள்ளது.

Share this post with your friends